தமிழா தமிழா: தலை வழுக்கையால் பாதிக்கப்பட்டவர்கள் hair wig உடன் அசத்திய காட்சி!
இந்த வார தமிழா தமிழா நிகழ்ச்சியில், தலை முடியை இழந்ததால் வாழ்க்கை தலைகீழ் ஆனது என்பவர்கள் VS பொதுமக்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
அதில் பங்கேற்ற முடியை இழந்த நபர்கள் தங்களின் முக அமைப்புக்கு ஏற்ற வவையில் தங்களுக்கு பிடித்தமான hair wig-யை தெரிவு செய்து தலையில் அணிந்து பார்த்த கலகலப்பான காட்சிகள் அடங்கிய காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.

தமிழா தமிழா
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தமிழா தமிழா மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைபெற்று வெற்றி நடைபோட்டு வரும் ஒரு நிகழ்ச்சியாக திகழ்கின்றது.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நீயா நானா நிகழ்ச்சியை போல், அதே பாணியில் நடைபெற்று வரும் இந்நிகழ்சிக்கும் பெருமளவாக ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது.

பிரபல தொகுப்பாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு பரபரப்பான விவாதம் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
இந்நிலையில், இந்த வாரம் தலை முடியை இழந்ததால் வாழ்க்கை தலைகீழ் ஆனது என்பவர்கள் VS பொதுமக்கள் என்ற தலைப்பில் பல்வேறு சுவாரஸ்யமான விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதில் பங்கேற்ற முடியை இழந்த நபர்களின் அணியினர் தங்களுக்கு பிடித்தமான hair wig-யை தெரிவு செய்து அணிந்து பார்த்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி அசுர வேகத்தில் லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் குவித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |