உடலையே தாய்மையின் ஓவியமாக மாற்றிய திருநங்கை! தீயாய் பரவும் புகைப்படங்கள்
அண்மைக்காலமாக சர்ச்சையில் சிக்கி தவிக்கும் திருநங்கை வைஷுலிசா தன்னால் தாயாக முடியாத வருத்தத்தை வெளிப்படுத்தும் வகையில், உடலையே தாய்மையின் ஓவியமாக மாற்றி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைராலாகி வருவதுடன் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளையும் தோற்றுவித்துள்ளது.
திருநங்கை வைஷுலிசா
சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் தன்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி என்னிடம் பாலியல் ரீதியான தொடர்பைக் கொண்டிருந்தார், மனைவியாகவும் நான் வாழ்ந்திருக்கிறேன்.

குழந்தைக்காக தான் அவர் திருமணம் செய்துக்கொள்ள சம்மதித்தேன். ஆனால் திருமணத்தின் பின்னர் என்னை விட்டு முழுமையாக விலகிவிட்டார் திருநங்கை வைஷுலிசா அண்மையில் புகார் கொடுத்திருந்தார்.

அதனால் இணையத்தில் வைஷுலிசா பற்றி அதிகம் தேடப்பட்டது. அதனை தொடர்ந்து நாஞ்சில் விஜயன் “நானும் அந்த பொண்ணும் சாதாரண நண்பர்கள் தான். எங்களுக்குள் இருப்பது தவறான தொடர்பு இல்லை என மனைவியை ஆதாரமாக நிறுத்து ஒரு காணொளியை வெளியிட்டு விளக்கம் கொடுத்தார்.
நாஞ்சில் விஜயனுடன் இவருக்கு ஏற்பட்ட பிரச்சினை இணையத்தில் பொது பிரச்சினையாக மாறி அண்மையில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.

திருநங்கை வைஷுலிசா சீரியல் நடிகையாகவும், சோஷியல் மீடியா பிரபலமாகவும் இருப்பதால் இவர்களின் பிரச்சினை இணையத்தில் தீவிரதமாக பேசப்பட்டது.

இந்நிலையில், தன்னால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத ஆதங்கம் இருந்தாலும், தனக்குள்ளும் தாய்மை உணர்வு இருக்கின்றது என்பதை பறைசாற்றும் வகையில் உடலையே தாய்மையின் சின்னமாக மாற்றி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |