Tamizha Tamizha:மருமகளை தூக்கி வைத்து பேசிய மாமியார்.. நாத்தனார் கொடுத்த பதிலை பாருங்க
தமிழா தமிழா நிகழ்ச்சியில் முதல் தடவையாக தன்னுடைய மருமகளை தூக்கி வைத்து பேசிய மாமியாரின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழா தமிழா
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் தமிழா தமிழா.
தற்போது பிரபல தொகுப்பாகுப்பாளர் ஆவுடையப்பன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இங்கு தலைப்புகள் கொடுப்பட்டு, இரண்டு அணிகள் தங்களின் வாதங்களை துவங்குவார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் நாம் இவ்வளவு நாட்களாக தீர்வு காண முடியாத பிரச்சினைகளுக்கு பக்க சார்பு இல்லாமல் ஒரு தீர்வு கிடைக்கும்.

அந்த வகையில், சுமாராக இரண்டு வருங்களுக்கு முன்னர், மாமியார் vs மருமகள் என இரண்டு தரப்பினர் கலந்து கொண்டு, தங்களுக்குள் இருக்கும் அன்பை பரிமாறிக் கொண்டனர்.
மருமகளை தாங்கியப்படி பேசிய மாமியார்
அப்போது மாமியார் ஒருவர்,“ என்னுடைய மருமகளை எனக்கு மிகவும் பிடிக்கும். என்னுடைய மகள் போல் அல்லாமல் எல்லாவற்றையும் நேர்மறையாக பேசும் குணம் கொண்டவர். ” என பேசியிருந்தார்.
அதற்கு மருமகள், “ஆமாம், என்னுடைய மாமியார் என்னை பெண் பார்க்க வந்த பொழுது, முதலில் கட்டியணைத்தப்படி என் மகனை பிடித்திருக்கிறதா? என்று தான் கேட்டார். அப்பொழுது எனக்கு மாமியாரை பிடித்து விட்டது. அதனால் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன்..” என்றார்.
இருவரின் அன்பை பார்த்து நாத்தனார் பொறாமைப்பட்டுக் கொண்டே சென்று கட்டியணைக்கிறார். இந்த காட்சியை பார்த்த மற்ற மாமியார்களும் கண்கலங்கி போய் உள்ளனர். இப்படியாக வெளியான எபிசோட் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்த இணையவாசிகள், “மாமியார்- மருமகள் என்றால் இப்படி இருக்க வேண்டும்...” எனக் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        