கெத்தா இருப்பதற்கு மனைவியை இப்படி டார்ச்சர் செய்வதா? கோபத்தில் கொந்தளித்த தொகுப்பாளர்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் பெண் கொடுத்தோர் மற்றும் பெண் எடுத்தோர் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை அறிவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
தற்போது பெண் கொடுத்தோர் மற்றும் பெண் எடுத்தோர் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
இதில் மகன், மகளை திருமணம் செய்து கொண்ட சம்பந்தி வீட்டினர் எதிரெதிரே இருந்து விவாதம் மேற்கொண்டுள்ளனர்.
திருமணத்தில் வெறும் லட்டுக்காக பெரிய பிரச்சினை செய்துள்ளதாக பெண் வீட்டார் குற்றம் சாட்டியுள்ளனர். மற்றொரு பெண் தனது மாமியார் எதுவும் கேட்ட மாட்டார்... ஆனால் தனது கணவர் தான் அதிகமாக கேட்பார் என்று கூறியுள்ளார்.
இதற்கு குறித்த ஆண் பதிலளிக்கையில், கெத்தாக இருக்க வேண்டும் என்பதற்காக இதெல்லாம் கேட்டேன் என்று கூறியுள்ளார். உடனே தொகுப்பாளர் உங்க சம்பாத்தியத்தில் வாங்கினால் தான் கெத்து என்று கூறி வாயடைக்க வைத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |