Tamizha Tamizha: இறந்த தந்தையை அரங்கத்திற்குள் கொண்டு வந்த மகன்! கண்ணீர் சிந்த வைத்த காட்சி
தமிழா தமிழா நிகழ்ச்சியில் வறுமையில் பிள்ளைகளை படிக்க வைத்த பெற்றோர்கள் மற்றும் படித்து உயர்ந்த பிள்ளைகள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் வறுமையில் பிள்ளைகளை படிக்க வைத்த பெற்றோர்கள் மற்றும் படித்து உயர்ந்த பிள்ளைகள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
இதில் இளைஞர் ஒருவர் தன்னைக் கஷ்டப்பட்டு படிக்க வைத்த பெற்றோர்கள், தான் நல்ல நிலைக்கு வந்த பின்பு உயிருடன் இல்லை என்று வருத்தப்பட்டுள்ளார்.
மறைந்த தனது பெற்றோர்களை அரங்கத்திற்குள் புகைப்படமாக கொண்டு வந்து அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |