Tamizha Tamizha: கர்ப்பமான மகளை கணவரின் முகத்தை பார்க்கவிடாத தாய்! கொந்தளித்த தொகுப்பாளர்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் கறுப்பழகு கணவர் மற்றும் சிவப்பழகு மனைவிகள் என்ற தலைப்பில் அரங்கத்தில் பேசியுள்ளனர்.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் கறுப்பழகு கணவர் மற்றும் சிவப்பழகு மனைவிகள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது. இதில் கலராக இருக்கும் பெண்கள் கறுப்பாக இருக்கும் ஆணை விரும்பியதால் வீட்டில் செய்த செயல்கள் அதிர்ச்சியளிக்கின்றது.
ஜாதி மற்றும் மதத்தை தாண்டி கலர் தான் முன்னாடி இருக்கின்றது என்று தொகுப்பாளர் கொந்தளித்துள்ளார். ஒரு காட்சியில் பெண் கர்ப்பமாக இருந்த தருணத்தில் அவரது தாய் கணவரை பார்க்கக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்துள்ளார்.
ஏனெனில் கணவர் கறுப்பாக இருப்பதால் குழந்தை அவரைப் போன்றும், கலர் கறுப்பாகவும் பிறக்கும் என்ற எண்ணத்தில் இருந்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |