ஜோதிகா மீது கோபத்தில் சிவக்குமார் செய்த காரியம் தெரியுமா?... உண்மையை உடைத்த பிரபலம்
நடிகை ஜோதிகா தனது மாமனார் வீட்டில் சாப்பிடக்கூட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை ஜோதிகா
நடிகர் சூர்யாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோதிகாவிற்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
திருமணத்திற்கு பின்பு நடிப்பதை நிறுத்திய இவர், நீண்ட இடைவேளைக்கு பின்பு 36 வயதினிலே என்ற படத்தில் நடித்து பெண்கள் மனதில் முக்கிய இடத்தை பிடித்தார்.
தற்போது அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் இவர், பாலிவுட்டிலும் நடித்து வருகின்றார். இவர் கணவர் மற்றும் குழந்தைகளுடனுன், மும்பையில் வசித்து வருகின்றார்.
மாமனார் வீட்டில் ஜோதிகா
இந்நிலையில் ஜோதிகாவைக் குறித்து தமிழா தமிழா பாண்டியன் கொடுத்துள்ள பேட்டி வைரலாகி வருகின்றது.
அதாவது சிவக்குமாருக்கு சினிமா குறித்து நன்றாக தெரியும் என்பதால் ஜோதிகாவை திருமணம் செய்வதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லையாம்.
ஆனால் சூர்யா அடம்பிடித்து அவரை திருமணம் செய்வதற்கு வீட்டில் சம்மதம் வாங்கியுள்ளார். இதே போன்று கார்த்தியும் செய்துவிடுவார் என்று நினைத்து தான் அவரை சொந்தத்தில் ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைத்தனர்.
தற்போது குழந்தைகள் வளர்ந்துவிட்ட பின்பு, மாமனார் கட்டுப்பாட்டில் இருக்க விரும்பாத ஜோதிகா குழந்தைகளின் படிப்பை காரணம் காட்டி மும்பையில் செட்டில் ஆகியுள்ளார்.
ஜோதிகா நடிக்க போகின்றார் என்றதும் வீட்டில் பிரச்சனை ஏற்பட்டு சிவகுமார் வீட்டில் சாப்பிடாமல் வெளியே சாப்பிடுள்ளாராம்.
நீண்ட நாட்களாக மனதில் தேக்கி வைத்திருந்த வாழ்க்கையை மும்பைக்கு சென்று வாழ்ந்து வருகின்றார். மும்பை வாழ்க்கைக்கு அடிமையாகியதை சமீபத்தில் விருது விழாவில் அவர் அணிந்து வந்த ஆடையே வெளிக்காட்டியுள்ளதாக பாண்டியன் பேசியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |