Tamizha Tamizha: காதலித்த கணவருக்கு கண்முன் நடந்த இரண்டாவது திருமணம்! 14 ஆண்டுகளாக குறையாத காதல்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் உடல் பருமனாக இருப்பது எனக்கு ஓகேதான் என்று கூறுபவர்கள் மற்றும் மனவேதனையை தருகிறது என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் உடல் பருமனாக இருப்பது எனக்கு ஓகேதான் என்று கூறுபவர்கள் மற்றும் மனவேதனையை தருகிறது என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
உடல் எடை அதிகமாக இருக்கும் பெண்கள் தங்களுக்கு வைத்துள்ள பெயர்களை அரங்கத்தில் கூறியுள்ளனர். கும்பி, இட்லி குண்டா, டேங்கர் லாரி என பல பெயர்களை வைத்து அழைகின்றனர்.
திருமணமான கணவர் நான் குண்டாக இருப்பது அசிங்கமாக இருப்பதாக கூறி விவாகரத்து வரை சென்றுள்ளாராம். மற்றொரு பெண் சிறுவயதிலிருந்தே குண்டாக இருப்பதாகவும், நான் குண்டாக இருப்பது பிடித்ததால் கணவர் திருமணம் செய்ததாகவும், நாளடைவில் மிகவும் மோசமாக மாறியதாகவும் அரங்கத்தில் கூறி வருத்தப்பட்டுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |