அசைவப் பிரியர்களின் அட்ராஸிட்டி... அரங்கத்தில் எச்சில் ஊறிய நிலையில் ரோபோ சங்கர் மனைவி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் அசைவத்திலிருந்து சைவத்திற்கு மாறியவர்கள்... அசைவப் பிரியர்கள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதோ போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை அறிவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் அசைவமாக இருந்து சைவத்திற்கு மாறியவர்கள் மற்றும் அசைவப் பிரியர்கள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
இதில் அசைவப்பிரியர்களாக இருக்கும் நபர்கள், தனது அசைவ குறித்து கொடுக்கும் ரியாக்ஷன் அரங்கத்தில் உள்ள அனைவரையும் எச்சில் ஊற வைத்துள்ளது.
வயதான தாத்தா ஒருவர் தனது கறிக்குழம்பை விவரித்து கூறும் போது ஒட்டுமொத்த அரங்கமே அவரை நோக்கியே இருந்துள்ளது. மேலும் மற்றொரு பெண் மீன் குழம்பையும், அதிலிருக்கும் மீனையும் சாப்பிடும் விதத்தினை கூறி வாயடைக்க வைத்துள்ளார்.
அதிலும் சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் ரோபோ சங்கர் மனைவியையே எச்சில் ஊற வைத்துள்ளார். ரோபோ சங்கர் மனைவி, குறித்த அசைவ பிரியர் பெண்ணிடம் எங்க தெய்வமே இருந்த இத்தனை நாளு.... என்று கேட்க அவரோ இதே ஊர்ல தான்டா செல்லம் இருந்தேன் என்று மாஸாக பதில் அளித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |