உங்களது நகை, சொத்து யாருக்கு? அரங்கத்திற்குள் மாமியாரை அழைத்து கேட்ட கேள்வி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் நாத்தனார் அடுத்த மாமியாரா? நாத்தனார் மற்றும் அண்ணி என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை அறிவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் நாத்தனார் அடுத்த மாமியாரா? நாத்தனார் மற்றும் அண்ணி என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
இதில் நாத்தனார் ஒருவர் வீட்டிற்கு வந்த மருமகளை மாமியார் போன்று தன்னை நினைத்து அடக்கி வைக்கின்றார். மேலும் தனது அம்மாவின் சொத்து மற்றும் நகையை குறித்து இவர் ஏன் கேட்கிறார் என்ற விவாதம் ஏற்பட்டுள்ளது.
இறுதியாக மகள் மற்றும் மருமகளில் யாருக்கு தனது நகை, சொத்து என்பதை தெரிந்து கொள்வதற்கு மாமியாரையே அரங்கத்திற்குள் நடுவர் அழைத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |