Tamizha Tamizha: ஒரே இரவில் நடைபெற்ற மாற்றம்... 10 வருட காதலனை கரம்பிடித்த பெண்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் முறை பெண் - முறை பையன், மண வாழ்க்கையில் இருக்கும் சிக்கல்களும், சுவாரசியமும் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் முறை பெண் - முறை பையன், மண வாழ்க்கையில் இருக்கும் சிக்கல்களும், சுவாரசியமும் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
இதில் பெண் ஒருவர் தான் காதலித்த முறை பையனை திருமணம் செய்ய முடியாத நிலையில், வேறொருவரை திருமணம் செய்ய தயாராகியிருந்துள்ளார்.
ஆனால் ஒரே நாளில் நடந்த மாற்றம் இவர்களின் திருமணத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. இவ்வாறு தனது முறை பெண்ணையும், முறை பையனையும் எப்படி காதலித்து திருமணம் செய்து கொண்டோம் என்பதை அழகாக கூறியுள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |