Tamizha Tamizha: நான் அகால மரணம் அடைஞ்சிட்டேன்... அரங்கத்தில் வந்துநின்ற பேய்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் எனக்கு பேய் பிடித்த அனுபவம் இருக்கு என சொல்பவர்கள் மற்றும் நம்பாதவர்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.

இந்த வாரத்தில் எனக்கு பேய் பிடித்த அனுபவம் இருக்கு என சொல்பவர்கள் மற்றும் நம்பாதவர்கள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
இத்தருணத்தில் அரங்கத்தில் இருந்த பெண் ஒருவர் தனது உடம்பில் பேய் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் நான் அகால மரணம் அடைஞ்சிட்டேன் என்று கூறவே, வாயடைத்து நின்ற தொகுப்பாளர் நீங்களா? இது பேயா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
பெண்ணின் பேச்சு, அவர் கொடுத்த ரியாக்ஷனை அவதானித்த ஒட்டுமொத்த அரங்கத்தில் உள்ளவர்கள் சிரிப்பை அடக்கமுடியாமல் இருந்துள்ளனர்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |