Tamizha Tamizha: உலகம் அழியப் போகின்றதா? அரங்கத்தில் இளைஞரின் கதறல்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் விதவிதமான பயங்கள் கொண்டவர்கள் மற்றும் எதற்கும் துணிந்தவர்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.

இந்த வாரத்தில் விதவிதமான பயங்கள் கொண்டவர்கள் மற்றும் எதற்கும் துணிந்தவர்கள் என்ற தலைப்பில் பல உண்மையை அரங்கத்தில் கூறியுள்ளனர்.
பெண் ஒருவர் தனது காலை தரையில் வைப்பதற்கு கூட பேய் இருப்பதாக பயம் கொள்கின்றார். பைக்கைப் பார்த்தால் பயம் என்று ஒரு இளைஞரும், மற்றொரு இளைஞர் உலகம் அழிந்துவிடும் என்ற பயத்தையும் கூறியதுடன் அரங்கத்தையே சிரிக்க வைத்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |