Tamizha Tamizha: தந்தைக்கு உயிர் கொடுத்த மகள்... அரங்கத்தையே கண்கலங்க வைத்த உண்மை
தமிழா தமிழா நிகழ்ச்சியில் மகள் வந்ததால் என் வாழ்க்கை மாறியது அப்பா மற்றும் மகள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றுள்ளது.
தமிழா தமிழா
இன்று பல தொலைக்காட்சிகளில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் நடந்து வரும் நிலையில், தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது. ஏனெனில் இதில் எடுக்கப்பட்டு விவாதிக்கப்படும் தலைப்பு மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு ஒத்துப் போவதாக இருந்து வருகின்றது.
அதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இந்நிகழ்ச்சியினை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.

இந்நிலையில் இந்த வாரம் மகள் வந்ததால் என் வாழ்க்கை மாறியது அப்பா மற்றும் மகள் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகிறது.
பெண் பிள்ளைகள் என்று ஒதுக்கப்படும் நிலையில், எனது மகளால் தான் நான் உயிரோடு இருக்கிறேன் என்று தந்தை ஒருவர் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
மேலும் தந்தையின் விபத்தால் வயிற்றில் வளர்ந்த பெண் குழந்தைக்கு கெட்ட பெயர் ஏற்பட்டதாக இளம்பெண் ஒருவர் அரங்கத்தில் குமுறுகின்றார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |