தமிழா தமிழா: இதுவல்லவா Love... வைரலாகும் பார்வையற்ற தம்பதியினரின் காதல் கதை!
இந்த வார தமிழா தமிழா நிகழ்ச்சியில், ஆதரவற்ற இல்லத்தில் வளர்ந்தவர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கை துணை என்ற தலைப்பில் சுவாரஸ்யமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அதில் பங்கேற்ற கண் பார்வையற்ற தம்பதியினர் தங்களின் காதல் கதை குறித்து அரங்கத்தில் பகிர்ந்துக்கொண்ட வியக்கவைக்கும் சுவாரஸ்யமான விடயங்கள் தற்போது இணையத்தில் பலரது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.

தமிழா தமிழா
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தமிழா தமிழா மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைபெற்று வெற்றி நடைபோட்டு வரும் ஒரு நிகழ்ச்சியாக திகழ்கின்றது.
பிரபல தொகுப்பாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கு பெருமளவில் ரசிகர்கள் இருக்கின்றார்கள்.

இந்நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு பரபரப்பான விவாதம் அல்லது சுவாரஸ்யமான கலந்துரையாடல் நடைபெருவது வழக்கம்.
இந்நிலையில், இந்த வாரம் ஆதரவற்ற இல்லத்தில் வளர்ந்தவர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கை துணை என்ற தலைப்பில் சுவாரஸ்யமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதன் சில காட்சிகள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |