Tamizha Tamizha: கற்பனை மனைவிக்கு குட்டி பேலஸ்ஸா? நெஞ்சைப் பிடித்த தொகுப்பாளர்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் திருமண வாழ்க்கைக்குள் நுழைய காத்திருப்பவர்கள் மற்றும் திருமணம் வேண்டாம் என சொல்லும் திருமணம் ஆனவர்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.

இந்த வாரத்தில் திருமண வாழ்க்கைக்குள் நுழைய காத்திருப்பவர்கள் மற்றும் திருமணம் வேண்டாம் என சொல்லும் திருமணம் ஆனவர்கள் என்ற தலைப்பில் பல உண்மையை அரங்கத்தில் கூறியுள்ளனர்.
இதில் நபர் ஒருவர் தனது எதிர்கால மனைவியைக் கற்பனை செய்து அவருக்காக குட்டி பேலஸ் ஒன்றினைக் கட்டியுள்ளாராம். இதனைக் கேட்ட தொகுப்பாளர் ரொம்ப நெஞ்சை நக்குறடா என்று கூறி சிரித்துள்ளார்.
பெண் ஒரு நிமிடம் பேசினால் சண்டை வராது... ஒன்றரை மணி நேரம் பேசினால் கண்டிப்பாக விவாகரத்து தான் என்று திருமணம் வேண்டாம் என்ற தரப்பிலிருந்து பேசியுள்ளார்.
மற்றொரு பெண் காதல், கல்யாணம் அரிப்பு மாதிரி... சொரிய சொரிய நன்றாக இருக்கும் பின்பு அங்கங்கே தடுப்பா இருக்கும் என்று கூறி அரங்கத்தை சிரிக்க வைத்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |