படுக்கையில் சிறுநீர் கழிக்கும் கணவர்.. மனைவியின் ஆதங்கம்- ஆவுடையப்பன் கூறிய தீர்வு
படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் கொண்ட கணவரால் மனைவி படும் வேதனையை பெண்ணொருவர் தமிழா தமிழாவில் மனம் விட்டு பேசியிருக்கிறார்.
தமிழா தமிழா
தற்போது தொலைக்காட்சிகளில் அதிகமாக ரியாலிட்டி நிகழ்ச்சிகள் தான் நடந்து கொண்டிருக்கிறது.
அந்த வரிசையில், பிரபல தொலைக்காட்சியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி தமிழ்நாடு உட்பட பல இடங்களில் ரசிகர்களை குவித்து வைத்திருகிறத.
அதே போன்று பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சி தான் தமிழா தமிழா. இந்த நிகழ்ச்சியை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
சிறுநீர் கழிக்கும் கணவர்
இந்த நிலையில், இந்த வாரத்தில் பிறந்திருக்கும் 2025 ஆம் ஆண்டில் Resolutions லிஸ்ட் போடும் மனைவிகள் மற்றும் கணவன் என்ற தலைப்பில் விவாதம் எழுந்து வருகிறார்.
அதில், கணவர்கள் மற்றும் மனைவிகள் தங்களிடம் காணப்படும் குறைகளை கூறி, அதற்கான தீர்வுகளையும் அங்கையே பெற்றுக் கொள்கிறார்கள்.
இதன்படி, கலந்து கொண்ட மனைவியொருவர், “ என்னுடைய கணவர் படுக்கையில் சிறுநீர் கழிக்கிறார். இதனால் என்னால் உறவினர்கள் வீட்டில் கூட சென்று தங்க முடியவில்லை. மாறாக உறவினர் ஒருவர் வீட்டிற்கு சென்றிருக்கும் பொழுது என்னுடைய கணவர் இப்படி செய்து விட்டார். அதனை மறைக்க நான் மிகவும் கஷ்டப்பட்டேன். அதனை அவர் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் மாற்றிக் கொள்ள வேண்டும்..” என அரங்கத்திற்கே அதிர்ச்சிக் கொடுத்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த கணவர்,“ எனக்கு சிறுவயது முதல் பேய் படங்கள் பார்த்து தான் அந்த பழக்கம் வந்தது. கனவில் வெளியில் செல்வது போன்று நினைத்து கொண்டு படுக்கையில் சென்று விடுவேன்..” என நகைத்தப்படி கூறினார்.
இதனை கவனித்த தொகுப்பாளர் ஆவுடையப்பன், “ இந்த விடயம் சிரிக்க வேண்டியது அல்ல. அதற்கான உரிய மருத்துவரை பார்த்து சிகிச்சை எடுத்து கொள்வது தான் சிறந்தது.” என தீர்வு கூறியுள்ளார்.
இப்படியாக நிகழ்ச்சியில் இருந்து ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |