Tamizha Tamizha: குளிக்கவே மாட்டேன்றான் சார... அரங்கில் அவிழ்க்கப்பட்ட கணவரின் ரகசியம்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் 2025 Resolutions லிஸ்ட் போடும் மனைவிகள் மற்றும் கணவன் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் 2025 Resolutions லிஸ்ட் போடும் மனைவிகள் மற்றும் கணவன் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
இதில் கணவர்களிடம் உள்ள குறைகளை ஒரே வார்த்தையில் சிலேட் ஒன்றில் எழுதியுள்ளனர் மனைவிகள். அதே போன்று மனைவியின் குறையை ஒரே வார்த்தையில் எழுதியுள்ளனர் கணவர்கள்.
பெண் ஒருவர் தனது கணவர் குளிக்கவே மாட்டேன்றான் என்று மனைவி குற்றச்சாட்டு வைத்துள்ளார். அதற்கு ஆவுடையப்பன் குறித்த நபரை பார்த்து ஹீரோ மாதிரி ஜொலிக்கிறாரேங்க என்றார். கணவர் அதற்கு தான் சார் குளிக்க மாட்டேன் என்று கொடுத்த பதில் அரங்கத்தையே சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதே போன்று கணவர் தனது மனைவி ஆம்பளை மாதிரி நடந்து கொள்வதாக கூறிய நிலையில், குறித்த பெண்ணும் அரங்கத்தில் ஆண் தோரணையில் நடந்து நடுவரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |