Tamizha Tamizha: விதவை தாய்க்கு தலையில் பூ வைத்து அழகுபார்த்த மகன்! அரங்கமே கண்கலங்கிய தருணம்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் இந்த வாரம் குடும்பத்தின் சூழ்நிலையை மாற்ற உழைக்கும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் குடும்பத்தினர் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.

இந்த வாரத்தில் குடும்பத்தின் சூழ்நிலையை மாற்ற உழைக்கும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் குடும்பத்தினர் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
இதில் மகன் ஒருவர் தனது தந்தை இல்லாமல் மாற்றுத்திறனாளியான தனது தாய் தங்களை வளர்ப்பதற்கு பட்ட கஷ்டத்தை கூறியுள்ளார்.
மேலும் விதவை என்பதால் பூ வைக்காமல் இருந்த அம்மாவிற்கு பூ கொண்டு வந்த தலையில் வைத்து அழகு பார்த்துள்ளார். இந்த நிகழ்வு ஒட்டுமொத்த அரங்கத்தையும் கண்கலங்க வைத்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |