அம்மி மிதித்து அருந்ததி பார்த்து தென் கொரிய நாட்டு பெண்ணை மணந்த தமிழன்
வெளிநாட்டு பெண்ணை தமிழ்நாட்டு வாலிபர் திருமணம் செய்த கொண்டுள்ள நிகழ்வு வைரலாகி வருகிறது.
இன்றைய காலக்கட்டத்தில் விநோதமான திருமணங்கள் மற்றும் மதம், இனம், மொழி, நாடு, நிறம், வயது என அனைத்தையும் கடந்துள்ளது.
அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த வெள்ளக் குட்டை என்னும் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் - செல்வராணி. இவர்களின் மகன் பிரவீன் குமார்.
இவர், மேற்படிப்புக்காக தென் கொரியா சென்று படித்து முடித்த பின், அங்கேயே, உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் உதவி மேலாளராக பணியாற்றி வந்துள்ளார்.

அந்த நேரத்தில், பிரவீன் குமாருக்கு பூசான் மாகாணத்தை சேர்ந்த சேங்வான்முன் என்ற பெண் மீது காதல் வயப்பட்டுள்ளது. இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இதன் பின்னர் காதலை பெற்றோர்களிடம் தெரிவிக்க, காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, வாணியம்பாடியை அடுத்த கிரிசமுத்திரத்தில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் வைத்து பிரவீன் குமார் - சேங்வான்முன் திருமணம் படு ஜோராக நடைபெற்றது.

தமிழக முறைப்படி, தாலி கட்டி பிரவீன் குமார் திருமணம் செய்து கொண்ட நிலையில், அம்மி மிதித்தல், மெட்டி போடுதல் என அனைத்து சடங்குகளும் நடந்துள்ளன.
இந்த ஜோடிக்கு ஏரளமான குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் கலந்து கொண்டு இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.