வெறும் 30 நிமிடத்தில் 131 வகையான உணவை சமைத்து சாதனைப் படைத்த தமிழ்ப்பெண்! குவியும் பாராட்டுகள்
வெறும் அரை மணிநேரத்தில் 134 வகையான உணவுகளை சமைத்து மதுரையைச் சேர்ந்த தமிழ்ப் பெண் சாதனை படைத்திருக்கிறார்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் இந்திரா ரவிச்சந்திரன். இவர் சமையல் கலையில் சாதனை படைக்க வேண்டும் என பல நாட்கள் பயிற்சி செய்து வந்தார்.
இந்நிலையில், அரைமணி நேரத்தில் சைவம் – அசைவம் என 130 வகையான உணவுகளை தயார் செய்து சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
மேலும், இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிர்வாகியின் மேற்பார்வையில் விதவிதமான தோசை, இட்லி, ஊத்தப்பம், ஆம்லெட், ஆஃபாயில், வடை, பஜ்ஜி பலவகை பனியாரம், கொழுக்கட்டைகள், புட்டு, சிக்கன் குழம்பு, சிக்கன் பிரியாணி, மீன் குழம்பு, குளிர்பானங்கள், ஜஸ்கிரீம் மற்றும் கேக் வகைகள் உள்ளிட்ட பல்வேறு வகை உணவுகளை தயார் செய்து அசத்தியுள்ளார்.
அரை மணி நேரத்தில் பரபரப்பாக தனி ஆளாக செயல்பட்டு இந்த உணவு வகைகளை அவர் தயார் செய்துள்ளார். வெறும் 30 நிமிடத்தில் கூடுதலாக 4 வகை உணவுகளையும் சேர்த்து மொத்தம் 134 வகையான உணவுகளை தயார் செய்துள்ளார்.
இதற்கு முன், கேரளாவை சேர்ந்த ஹேயன் என்ற 10 வயது சிறுவன் 1 மணி நேரத்தில் 172 வகையான உணவுகள் தயாரித்து சாதனை படைத்துள்ளான்.
அந்த சாதனையை இந்திரா ரவிச்சந்திரன் முறியடித்து, இந்தியன் புக் ஆப் ரெக்கார்டு சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இது குறித்து இந்திரா ரவிச்சந்திரன் கூறுகையில், நான் சமையல் வேலைகளை வேகமாக செய்து முடிப்பேன்.
கணவர் ரவிச்சந்திரன் என்னுடைய திறமையை பார்த்து சமையல் கலையில் சாதனை புரியலாமே என்று என்னை ஊக்குவித்தார். இதற்காக பல நாட்கள் பயிற்சியை மேற்கொண்டேன். அதனையடுத்து, இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்திற்கு விண்ணப்பித்தேன்.
இந்த சாதனைக்கு எனது குடும்பத்தினர் ஊக்கம் அளித்தனர் என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார். தற்போது சமூகவலைத்தளத்தில் இந்திரா ரவிச்சந்திரனுக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
