ரயில் தண்டவாளத்தில் திடீரென தவறி விழுந்த முதியவர்: சட்டென ஓடிச் சென்று உயிரை காப்பாற்றிய பாதுகாப்பு படையினர்!
வேலூர் மாவட்டம் காட்பாடி இரயில் நிலையத்தில் இன்று காலை வடமாநில முதியவர் ஒருவர் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த குட்ஸ் வண்டியை கடக்க முயற்சி செய்தார்.
அப்போது, திடீரென்று நிலைத்தடுமாறி எதிர்பாராத விதமாக தண்டவாளத்தில் விழுந்தார். அப்போது அந்த பெரியவர் குட்ஸ் வண்டிக்கு கீழே நுழைந்து சென்று விடலாம் என்று நினைத்த நேரத்தில் வண்டி நகர ஆரம்பித்தது.
இதை கவனித்த காட்பாடி ரயில்வே போலீஸ் வினோத் மற்றும் தலைமை காவலர் சண்முகம் ஆகியோர் கீழே விழுந்த பெரியவரை ஓடிச்சென்று காப்பாற்றினார்கள். இச்சம்பவத்தால் காட்பாடி இரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பான காட்சகிள் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. தன் உயிரை பொருட்படுத்தாமல் உடனே சென்று முதியவரை காப்பாற்றிய காட்பாடி ரயில்வே போலீசாருக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
