நிற்காமல் சென்ற அரசு பேருந்து - தட்டிக் கேட்ட பெண்ணை செருப்பை கழற்றி அடிக்க பாய்ந்த ஓட்டுநர்!
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவித்ததையடுத்து, அரசு பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணம் இல்லாத டிக்கெட் வழங்கப்படுகிறது.
பெண்கள் இலவசமாக அரசு பேருந்துகளில் பயணம் செய்வதால் பேருந்து நடத்துனர்கள் அவர்களிடம் அலட்சியமாக நடந்துகொள்வதாக புகார்கள் எழுந்துள்ளது.
இந்நிலையில், தென்காசியில் பெண் ஒருவர் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் பேருந்து சென்றதால், கோபமடைந்து நடத்துனரிடம் தட்டிக் கேட்டுள்ளார். அதற்கு நடத்துனர், உன் இஷ்டத்திற்கு எல்லாம் பேருந்தை நிறுத்த முடியாது என்று அலட்சியமாக கூறியிருக்கிறார்.
இதனால் அவர் இறங்க வேண்டிய இடத்தில் நிற்காமல் வேறு ஒரு இடத்தில் இறக்கி விட்டுள்ளார். இதை தட்டிக் கேட்டதற்கு ஓட்டுநரும், நடத்துனரும் அந்தப் பெண்ணை மரியாதை குறைவாக பேசியுள்ளனர். அரசு இலவச பயணம் என்பதால் நீங்கள் இலவசமாக எங்களை அனுமதிக்கவில்லை.
அரசு எங்களுக்கு இலவசமாக அனுமதி தந்துள்ளது என்று அந்த பெண் பேசிக்கொண்டிருந்த போது, சட்டென்று செருப்பை கழட்டி அடித்து விடுவேன் என்று கோபமாக பேசி அந்தப் பெண் மீது பாய்ந்திருக்கிறார் ஓட்டுநர்.
தன்னை செருப்பை கழட்டி அடிக்க பாய்ந்த ஓட்டுநரிடம், பதிலுக்குப் இன்னும் பேசியிருக்கிறார் அந்தப்பெண். இருவரும் மாறி மாறி அநாகரிகமாக பேசிக் கொண்டிருந்த வீடியோ ஒன்று தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி பரவி வருகிறது.
