திடீரென நள்ளிரவு கேட்ட அலறல் சத்தம்...துங்கி கொண்டிருந்த கணவருக்கு நேர்ந்த கதி! பேரதிர்ச்சியில் குடும்பம்
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது காங்கிரீட் மேல்பூச்சு பெயர்ந்து விழுந்து இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கோவை ராமநாதபுரம் பாரதி நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் வினோத் கண்ணன் (வயது 35) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
கடந்த 8 ஆண்டுகளாக குடும்பத்தினருடன் அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

வினோத் கண்ணன் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கான PVC கதவுகளை தயாரிக்கும் பணியை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில், வினோத் கண்ணன் வெள்ளிக்கிழமை இரவு வீட்டிற்குள் தூங்கிக்கொண்டு இருந்துள்ளார்.
நள்ளிரவு திடீரென அவர் மீது வீட்டின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இதில் படுகாமடைந்த வினோத் கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

வீட்டுக்குள் பயங்கர சத்தம் வந்ததைக் கேட்டு குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அப்போது கான்கிரீட் மேற்கூரை வினோத் கண்ணன் மீது விழுந்திருந்ததைக் கண்டு மனைவி கதறியுள்ளார்.
மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றும் உயிரை காப்பாற்ற முடிய வில்லை. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை பேரதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.