தீபாவளி அன்று ஆட்டுக்கறி எடுப்பது ஏன்? இப்படியொரு விஷயம் இருக்குதாம்
தீபாவளி என்றாலே நமது நினைவுக்கு வருவது என்னவென்றால் புத்தாடை மற்றும் பட்டாசு, பலகாரம், குறிப்பாக அசைவ உணவுகள் தான். இந்த அசைவ உணவுகள் சாப்பிடும் வழக்கம் எவ்வாறு வந்தது என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தற்போது இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தீபாவளி பண்டிகை
நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டியையை எண்ணெய் தேய்த்து, பட்டாசுகளை வெடித்தும், புத்தாடை அணிந்தும் இந்துக்கள் கொண்டாடி வருகின்றனர்.
மற்ற மதத்தினருக்கும் தங்களது வீட்டு பலகாரங்களை கொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் இத்தருணத்தில், தீபாவளி தினத்தன்று மட்டும் மக்கள் அதிகமாக ஆட்டு இறைச்சியை விரும்பி வாங்குகின்றனர்.
இந்த உணவு முறை மாற்றம் தமிழ்நாட்டில் மட்டும் வித்தியாசமாக இருப்பது ஏன்? என்ற கேள்வி பலருக்கும் இருக்கும் நிலையில், இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் தொ.பரமசிவன் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் அளித்த விளக்கத்தில், தீபாவளிக்கும் தமிழ்நாட்டுக்கும் எந்தவொரு தொடர்பு இல்லை என்றும் விஜயநகர பேரரசு தமிழ்நாட்டில் வருவதற்கு முன்பு இப்பண்டியை தமிழர்கள் கொண்டாடுவதில்லை. சங்க இலக்கியங்களிலும் தீபாவளி பற்றிய குறிப்புகளை எங்கும் பார்க்கவும் முடியாது.
இப்பண்டியை வட இந்தியாவில் இருந்து வந்தது என்றும், புராணக் கதைகள் மூலம் கட்டமைக்கப்பட்ட பிராமணிய பண்டிகை என்றும் கூறியுள்ளார். அசைவ உணவு வழக்கம் என்பது சங்க இலக்கிய காலம் தொட்டே இருக்கின்றது.
அதிலும் தமிழர்களைப் பொறுத்தவரை கொண்டாட்டத்தில் இருக்கும்போதும், விருந்தினரை உபசரிக்கும்போதும் புலால் உணவுகளை வைத்து அவர்களுக்கு விருந்து அளிப்பதையே பெருமையாக கருதியிருக்கின்றனர். இதனாலேயே தீபாவளி பண்டிகையின் போது, அசைவ உணவிற்கு முன்னுரிமை அளிப்பதாக குறித்த ஆய்வாளர் கூறியுள்ளார்.
விநாயகர் சதுர்த்தி போன்று பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வந்த பண்டிகை தான் இந்த தீபாவளி பண்டிகை என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |