ஒரே நாளில் ஹீரோவான ஷாருக்கான்: யார் இவர் தெரியுமா?
3 சிக்சர்கள், 1 பவுண்டரி என 33 ரன்கள் குவித்து கர்நாடகாவின் கனவை தகர்த்து தமிழ்நாடு அணிக்கு கோப்பையை வென்று தந்த ஷாருக்கான் தான் இப்போது இந்திய கிரிக்கெட்டின் ஹாட் டாபிக் .
டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சொதப்பலால் அணியின் வெற்றி ஷாருக்கானை நம்பி இருந்த நிலையில், இறுதியில் கோப்பையை வென்று தந்துள்ளார்.
யார் இவர்?
சென்னையை பூர்வீகமாகக் கொண்ட ஷாருக்கான், 2013ல் விஜய் ஹசாரே தொடர் மூலம் தமிழ்நாடு அணியில் அறிமுகமானார்.
கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பான ஆட்டத்தை நிரூபித்ததன் மூலம் 2018ல் புகழ்பெற்ற ரஞ்சி தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.
உயரமான வலது கை பேட்ஸ்மேன் என்பதால் பந்துவீச்சாளர்களின் சிம்ம சொப்பனமாக வலம் வந்தார்.
பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டாலும் நாலாப்புறமும் ஷாட் அடிப்பதில் இவர் கெட்டிக்காரர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற சையது முஸ்தாக் அலி தொடரில் வெறும் 4 போட்டிகளில் மட்டுமே களம் கண்ட ஷாருக்கான் அனைத்திலுமே கேம் சேஞ்சராக திகழ்ந்தார்.
தமிழ்நாடு அணி இறுதிப்போட்டிக்குள் நுழைய முக்கிய காரணமாக இருந்ததோடு மட்டுமின்றி, அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தையும் பிடித்தார்.
4 இன்னிங்சில் 88 ரன்கள் மட்டுமே விளாசியிருந்தாலும் ஸ்ட்ரைக் ரேட் 220ஐ எட்டியிருந்தது. இதுதான் அவருக்கான முகவரியை கொடுத்தது.
டெத் ஓவர்களில் எதிரணியை பொலந்து கட்டுவதில் கில்லி எனும் பெயர் பெற்ற ஷாருக்கானுக்கு கடந்த ஐபிஎல் ஏலத்தில் ஜாக்பாட் அடித்தது.
Fini ??? ing off in sty7e! ?#SyedMushtaqAliTrophy #WhistlePodu ? pic.twitter.com/QeuLPrJ9Mh
— Chennai Super Kings - Mask P?du Whistle P?du! (@ChennaiIPL) November 22, 2021
ஐபிஎல் என்ட்ரி
ஐபிஎல் ஏலத்தில் கடுமையான போட்டிக்குப் பிறகு 5.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்து ஆச்சரியப்படுத்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி.
ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் விளையாடிய ஷாருக்கான் 153 ரன்களை குவித்தார். உடற்பயிற்சியில் அதிகளவில் ஈடுபாடு காட்டுவதும் போட்டியை எளிமையாக அணுகுவதே ஷாருக்கின் பாணி.
ஐபிஎல் தொடரின் போது எம்.எஸ்.தோனி, கிறிஸ் கெய்ல் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களோடு கலந்துரையாடி அவர்களிடம் இருந்து ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளவும் ஷாருக்கான் தவறவில்லை.
ஒரேநாளில் ஹீரோவான ஷாருக்கான் வாழ்த்து மழையில் நனைத்து வருகிறார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும் கிரிக்கெட் நட்சத்திரங்களும் ஷாருக்கான் உள்பட தமிழ்நாடு அணிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.