2026-27 தமிழ்நாடு பட்ஜெட்.., மாணவர்களுக்காக வெளியான முக்கிய அறிவிப்புகள்
2026-27ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
59 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக, அதிமுக அல்லாத கட்சியாக தவெக அரசு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது.
இந்த பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44,527 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறைக்கு ரூ.8,393 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்கள் மற்றும் கல்வித்துறைக்கான பல முக்கிய அறிவிப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன.
மாணவர்களுக்கான அறிவிப்புகள்
சூப்பர் க்ளீன் - சூப்பர் கேம்பஸ் திட்டம் 10,000 பள்ளிகளில் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.139 கோடி ஒதுக்கீடு.
3,734 அரசு பள்ளிகள் ரூ.2,132 கோடியில் நவீனப்படுத்தப்படும்.
காமராஜர் பெயரில் நவீன உண்டு, உறைவிட வசதியுடன் சிறப்பு பள்ளிகள் தொடங்கப்படும்.
9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சீருடை, புத்தகங்கள் வழங்க ரூ.122 கோடி ஒதுக்கீடு.
5 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் சைக்கிள் வழங்க ரூ.277 கோடி ஒதுக்கீடு.
கல்லூரி மாணவர்களுக்கான வெற்றி மடிக்கணினி திட்டத்திற்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு.
மாணவர் விடுதி வசதிகளை மேம்படுத்த ரூ.10 கோடி ஒதுக்கீடு.
காமராசர் காலை உணவுத் திட்டம் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.இதற்காக ரூ.710 கோடி ஒதுக்கீடு.
2031க்குள் 5 லட்சம் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) திறன் பயிற்சி வழங்கப்படும்.
அரசு நூலகங்கள் டிஜிட்டல் நூலகங்களாக மாற்ற ரூ.10 கோடி ஒதுக்கீடு.
SSC, RRB, IBPS போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையங்கள் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மையங்களிலும் அமைக்கப்படும். இதற்காக ரூ.3.38 கோடி ஒதுக்கீடு.
10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் அமைக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு.
5 புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் ரூ.90 கோடியில் தொடங்கப்படும்.
பள்ளிப் பாடத்திட்டம் மறுசீரமைப்பு பணிகளுக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு.