இறப்பதற்கு முன்பு இயக்குனரின் கடைசி பதிவு! கலங்கும் ரசிகர்கள்
கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல இயக்குனர் தாமிரா சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
ஒட்டுமொத்த உலகத்தையும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனா, சாதாரண மக்கள், சினிமா பிரபலங்கள் யாரையும் விட்டு வைக்காமல் தனது கோரத்தாண்டவத்தினை ஆடி வருகின்றது.
ரெட்டைச் சுழி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான தாமிரா(52) பின்பு இவர் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் நடித்த ஆண் தேவதை படத்தினை இயக்கியதோடு, பல தொலைக்காட்சி தொடரையும் இயக்கிவந்தார்.

இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்பு கடந்த 11ம் திகதி தனது முகநூலில் இறுதி பதிவு ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
அவர் தனது பதிவில், இந்த உலகை வெல்ல அன்பைத் தவிர வேறு சூட்சுமம் இல்லை. என்னுள் இருக்கும் தீராக் கோபங்களை இன்றோடு விட்டொழிக்கிறேன்... இனி யாரோடும் பகைமுரண் இல்லை... யாவரும் கேளிர் என எழுதியுள்ளார்..
இந்த பதிவு தற்போது சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வரும் நிலையில், குறித்த இயக்குனர் இவ்வாறு பதிவிடும் போது அவருக்கு ஆறுதலாக பல ரசிகர்கள் விரைவில் எழுந்து வாருங்கள் என்று நம்பிக்கையோடு பதில் கொடுத்துள்ளது தற்போது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.