நான் தனி அறையில் இருக்கிறேன்…டீ, காபி கூட தரவில்லை! ஆண், பெண் என இரண்டு வேடங்களிளும் அதிரடி காட்டும் சிறுவன்!
ரித்விக் என்ற சிறுவன் செய்தியாளர்கள் போன்று வேடமிட்டு பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அதில், “செய்தி வாசிப்பாளர்- வணக்கம் தன்ராஜ் அங்கு நிலமை கட்டுக்குள் இருக்கிறதா?, செய்தியாளர் - நிலமை கட்டுக்குள் இல்லை, நான் தான் காட்டுக்குள் இருக்கிறேன்” இவ்வாறு மழைலை மொழியில் சிறுவன் பேசும் வீடியோவை குறிப்பிட்டு பலரும், செய்தியாளர்களுக்கு டேக் செய்து வருகின்றனர்.
அனைத்து கதாபாத்திரத்திலும் ஒரு சிறுவனே மாறிமாறி நடிக்கிறார். வேறு நபர்கள் யாரும் வரவில்லை.
அந்த வீடியோ Rithu Rocks என்ற யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ளது. முழு வீடியோவில், செய்தியாளர்கள், செய்தி அரங்கம் உள்ளிட்டவை பற்றி காண்பித்து காமெடியாக வீடியோவை பதிவு செய்துள்ளனர்.
வீடியோ ஜுலை 9-ம் தேதி பதிவிடப்பட்ட நிலையில், 16 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். டிவிட்டர், பேஸ்புக் போன்ற தளங்களில் அதன் சிறிய பாகங்கள் வெளியிடப்பட்டு வைரலாகியும் உள்ளது.