இலட்சம் இலட்சமாக சம்பாரித்தும்- வாடகை வீட்டில் காலத்தை ஓட்டும் பிரபலங்கள் இத்தனை பேரா?
சினிமாவில் நடிகர், நடிகைகளுக்கு பெரும் தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டாலும் இன்னும் வாடகை வீட்டில் வசிக்கும் பிரபலங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் ஒரு திரைப்படத்திற்கு குறைந்தது 10 இலட்சத்திற்கு மேல் தான் சம்பளம் வாங்குவார்கள்.
ஒரு படத்திற்கே இப்படி என்றால் திரைப்படங்கள் அடுக்கிக் கொண்டு செல்லும் போது இவர்களின் சம்பளம் மற்றும் பேங் பேலன்ஸ் அதிகரித்து கொண்டே செல்லும்.
ஆனாலும் இன்னும் சிலர் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். அந்த வகையில் இப்படியான பிரபலங்கள் யார் யார் என்பதனை தொடர்ந்து நாம் பார்க்கலாம்.
1. கவின்
சின்னத்திரை பிரபலமான கவின் பிக்பாஸ் வீட்டின் ஒரு முக்கிய போட்டியாளர் ஆவார். இதனை தொடர்ந்து வெள்ளத்திரையில் சிறந்த நாயகனாக ஜொலித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் “டாடா” என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பயங்கரமான வரவேற்பை பெற்றது.
இவரின் சம்பளம் தற்போது இலட்சங்களை தாண்டி கோடி செல்கின்றது. ஆனாலும் கவின் தற்போது வாடகை வீட்டில் தான் இருக்கிறாராம்.
2. எதிர்நீச்சல் மாரிமுத்து
எதிர்நீச்சல்” சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் பாரிய மாற்றத்தை கொண்டு வந்து தற்போது சின்னத்திரை நாயகனாக ஜொலிப்பவர் தான் மாரிமுத்து. இவரின் நடிப்பிற்கு ஈடாக சினிமாவில் ஒன்றும் இல்லை என்று தான் கூற வேண்டும்.
ஒரு நாளைக்கு சீரியலில் 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் மாரிமுத்து தற்போது வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறாராம். ஆனாலும் தற்போது சென்னையில் இடம் வாங்கி சொந்தமாக வீடு ஒன்றை கட்டி வருகிறாராம்.
3. பார்த்திபன்
தமிழ் சினிமாவில் தன்னுடைய யதார்த்தமான நடிப்பாலும் குதர்க்கமான பேச்சாலும் பிரபலமானவர் தான் நடிகர் பார்த்தீபன். இவர் வெள்ளத்திரையில் நாயகன் மட்டுமல்ல சிறந்த இயக்குநராகவும் பல விருதுகளை வென்றுள்ளார்.
இத்தனை பெறுமைகள் இருந்தாலும் இன்றும் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறாராம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |