தமிழ் சினிமா நடிகர்களை கர்ப்பிணிகளாக்கிய AI தொழில் நுட்பம்... தெறிக்கும் லைக்குகள்
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பிரபல தமிழ் சினிமா நடிகர்களை பெண் வேடங்களில் மாற்றியது மட்டுல்லாது அவர்கள் தாய்மை எனும் உன்னத நிலையை அடைந்ததை போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ள காணொளியொன்று இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
21ம் நூற்றாண்டில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் தான் உலகில் மிகப்பெரிய மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
அதுவும் ChatGPT-ன் வருகைக்குப் பின்னரே மக்களும் தொழில்நுட்ப நிறுவனங்களும் இந்த தொழில் நுட்பத்தின் பால் அதிக ஆர்வம் செலுத்த தொடங்கியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு பேசுபொருளாக மாறியதிலிருந்தே அசுர வேகத்தில் பல மேம்படுத்தல்களை சந்தித்து வருகிறது.
நாம் நினைத்துப் பார்க்க முடியாத வகையில், பல வேலைகளையும் நொடிப்பொழுதில் செய்து அசத்தி வருகிறது.
இந்நிலையில் AI தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பிரபல தமிழ் சினிமா நடிகர்கள் கர்ப்பினி பெண்களாக இருப்பது போன்று காட்சிப்படுத்தப்படும் நகைச்சுவை காணொளியொன்று இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |