பிக்பாஸிருந்து திடீரென வெளியேறிய பெண் போட்டியாளர்: அதிர்ச்சியில் ரசிகர்கள்! காரணம் என்ன?
கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மிகவும் பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்ட தமிழ்பிக்பாஸ் சீசன் 5ல் 18 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்து தற்போது வரை அதகளப் படுத்தியுள்ளனர்.
இன்று சனிக்கிழமை என்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கமல்ஹாசன் அகம் ரிவி வழியாக சக போட்யடிளார்களிடம் உரையாடல் செய்யவுள்ளார். இதன் ப்ரொமோ காட்சி இன்று வெளியாகியிருந்தது.
இந்த ப்ரொமோ காட்சியில், 18 போட்டியாளர்களில், 17 போட்டியாளர்கள் மட்டுமே இருப்பதை அவதானிக்கலாம். ஆம் நமீதா மாரிமுத்து அங்கு இல்லை என்பது தெரியவந்துள்ளது.
நமீதா சில தவிர்க்க முடியாத காரணத்தினால் பிக்பாஸ் ஷோவில் இருந்து வெளியேறிவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் சில தினங்களுக்கு முன்பு தான் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களை கூறி கதறியதோடு, ஒட்டுமொத்த போட்டியாளர்களையும் கண்ணீரில் ஆழ்த்தினார்.
திருநங்கைகள் படும் கஷ்டங்களை பற்றி அவர் கூறியது பிக் பாஸ் ரசிகர்களுக்கு அவர் மீது நல்லதொரு அபிப்பிராயத்தினை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது முதல் வாரத்திலேயே நமீதா வெளியேறி இருப்பது அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.