இந்த வாரம் வெளியேறும் போட்டியாளரின் முகத்திரையை கிழித்த தாமரை! வேற லெவல் ப்ரொமொ காட்சி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மற்றொரு போட்டியாளர்களின் கண்ணாடியாக மாறியுள்ளதுடன், அவர்கள் வெளிக்காட்டாத குணத்தினை கண்ணாடியாக இருப்பவர்கள் வெளியே கூறி அசிங்கப்படுத்தி வருகின்றனர்.
நேற்றைய தினத்தில் ஆரம்பித்த இந்த டாஸ்க் இன்றும் தொடர்கின்றது. இதில் தாமரை மற்றும் இசைவாணி இருவரும் நேருக்கு நேர் கண்ணாடியாக மோதுகின்றனர்.
எப்போதும் சத்தமாக கத்திக்கொண்டிருக்கும் தாமரை தற்போது பார்வையாளர்களின் கைத்தட்டலை பெற்று வருகின்றார். இந்நிலையில் இசைவாணியின் கண்ணாடியாக பிரதிபலித்த தாமரை அவரைக்குறித்து தாறுமாறாக பேசி உண்மை அனைத்தும் வெளியே கொட்டியுள்ளார்.
தாமரையின் உண்மை பேச்சினைக் காதில் வாங்கியும், வாங்காமலும் இசைவாணி முகத்தினை சுழித்துக்கொண்டு தனது தலைக்கனத்தினை காட்டி வருகின்றார்.
ஏற்கனவே கடந்த சில தினங்களாக இசைவாணியின் சுயரூபம் பார்வையாளர்களை வெறுப்படைய வைப்பதுடன், இவர் தான் இந்தவாரம் வெளியேறுவார் என்று கூறப்படுகின்றது.