பிக்பாஸ் சீசன் 5-ல் கலந்துகொள்ளும் முக்கியமான போட்டியாளர்கள் இவர்கள் தானா? பயங்கர எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்!
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை துவங்குவதற்கான ஆயத்த பணிகள் தற்போது சூடுபிடிக்க துவங்கியுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போட்டியாளர்களின் பெயர் தற்போது சமூக வலைத்தளத்தில் கசிந்துள்ளது.
ஏற்கனவே கடந்த சீசன்களை போலவே இந்த சீசனில் சண்டைக்கும், காதலுக்கும் பஞ்சமில்லாத போட்டியாளர்களை தான் களமிறக்குவார்கள் என தெரிகிறது.
அந்த வகையில், குக் வித் கோமாளி 2 வின்னர் கனி, நடிகை ரம்யாகிருஷ்ணன், மைனா நந்தினி., ஜி.பி. முத்து, நடிகர் எம்.எஸ். பாஸ்கர், ஷகீலா மகள் மீலா, செய்தி வாசிப்பாளர் கண்மனி, லட்சுமி ராமகிருஷ்ணன், ஜான் விஜய், ஆதவ் கண்ணதாசன் என ஒரு பெரிய லிஸ்டே வெளியாகி இருக்கிறது.
மேலும், தெலுங்கில் பிக்பாஸ் 5 ப்ரோமோ வெளியாகி நிலையில், தமிழுக்கான அப்டேட்டை நோக்கி ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
