மீண்டும் உள்ளே நுழையும் பணப்பெட்டி! 25 லட்சத்திற்கு போட்டி: சிம்பு கொடுத்த ஷாக்
பிக்பாஸ் அல்டிமேட்டில் நடிகர் சிம்பு புது ட்விஸ்ட் ஒன்றினைக் கொடுத்து பார்வையாளர்கள், போட்டியாளர்கள் என அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி அடுத்தவாரம் இறுதிகட்டத்தினை எட்டியுள்ள நிலையில், தற்போது ஆறு போட்டியாளர்கள் உள்ளே இருக்கின்றனர்.
இவர்களின் இன்று அபிராமி வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சிம்பு பயங்கர டுவிஸ்ட் ஒன்றினை கொண்டு வந்துள்ளார்.
அதாவது வெளியே பணப்பெட்டியுடன் சென்ற சுருதியை வரவழைத்து அவரிடமிருந்த பணப்பெட்டியை வாங்கிய சிம்பு, மறுபடியும் பணப்பெட்டிக்கு சண்டை போட வேண்டும்.
பணப்பெட்டியுடன் மற்றொரு நபர் வெளியேற வேண்டும் என்று கூறிய சிம்பு இந்த முறை 25 லட்சம் என்று கூறி அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.