தரமில்லாமல் சென்ற பிக் பாஸ் வீடு... போட்டியாளர்களுக்கு இன்று முடிவு கட்டும் கமல்
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்று கமல்ஹாசன் உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு ஒரு முடிவு கட்ட போவதாக கோபமாக கூறியுள்ள ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது இரண்டு மாதம் நிறைவடைந்துள்ளது.
இந்நிகழ்ச்சியிலிருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா, ஜோவிகா என 12 பேர் வெளியேறியுள்ளனர்.
இதில் இரண்டு பேர் உள்ளே மீண்டும் வைல்டு கார்டு போட்டியாளர்களாக வந்துள்ளனர். இந்த வாரம் வீட்டின் தலைவராக விஷ்னு காணப்படுகின்றார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நிக்ஷன் அர்ச்சனா இடையே பயங்கரமாக சண்டை வெடித்தது. இதில் நிக்ஷன் கோபத்தில் தவறாக பேசியுள்ளார்.
இதனால் இந்த வாரம் கமல்ஹாசன் ரெட் கார்டு கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் தற்போது வெளியொகிய ப்ரொமோ காட்சியில் கமல்ஹாசன் தரம் இல்லாமல் பிக் பாஸ் வீட்டில் விளையாடுகின்றனர் என்றும் இன்று ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று ஆவேசமாக பேசியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |