பிக்பாஸ் சீசன் 7ல் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் விபரம் இதோ
பிக்பாஸ் நிகழ்ச்சி 7ல் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த விபரம் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் நடைபெறும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் 6 சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது ஏழாவது சீசன் தொடங்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் இந்த மாதம் 7வது சீசன் தொடங்க இருக்கும் நிலையில், இதில் கலந்து கொள்ள இருக்கும் சில போட்டியாளர்கள் குறித்த தகவல் அவ்வப்போது வெளியாகி வருகின்றது.
சீசன் 7ல் ஜாக்குலின், ரச்சிதாவின் கணவர் தினேஷ், நடிகை ரேகா நாயர், நடிகர் பிருத்விராஜ், கோவை சேர்ந்த பெண் ஓட்டுனர் ஷர்மிளா ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகின்றது.
ரசிகர்கள் யூகித்தது போன்று இந்த சீசனில் இரண்டு வீடுகள் இருப்பதாக ப்ரொமோவில் கமல் கூறியிருந்தார். இதனால் நிகழ்ச்சி எவ்வாறு இருக்கும் என்ற கேள்வி பார்வையாளர்களிடையே அதிகம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரபல ரிவி பிக்பாஸ் சீசன் 7ன் தொடக்க தேதியை அறிவித்து ப்ரொமோ வெளியிட்டுள்ளது.
கலந்து கொள்ளும் போட்டியாளர்கள்
பிக்பாஸ் சீசன் 7 வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் பிரபல ரிவி மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளது.பிக் பாஸ் 7 தமிழ் ஒளிபரப்பாக உள்ளது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் ஆரம்ப தேதியை ஆகஸ்ட் 18ம் தேதி அதிகாரப்பூர்வமாக ப்ரொமோ வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பாலிமர் ரஞ்சித், நிலா நடிகை, வி.ஜே. பார்வதி, ரேகா நாயர், அம்மு அபிராமி, ஜாக்குலின், உமா ரியாஸ், ரவீனா தாஹா, மகாபா ஆனந்த் ஆகியோர் இந்த சீசனில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த சீசனின் பரிசுத்தொகையினை பிரபல ரிவி இன்றும் அறிவிக்கப்படவில்லை... ஆனாலும் சுமார் 60 லட்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |