Bigg Boss 9: பாருவின் வில்லத்தனத்தில் சிக்கிய வியானா! இனி நடக்கப்போவது என்ன?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று பாருவின் சூழ்ச்சி வலையில் சிக்கிய வியானா கனியை எதிர்த்து நிற்கின்றார்.
பிக் பாஸ் 9
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 17 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.
கடந்த 5ம் தேதி 20 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நந்தினி உடல்நல பிரச்சனையால் தானாக வெளியேறினார்.
பின்பு இயக்குனர் பிரவீன் காந்தி முதல் வாரத்திலும், அப்சரா இரண்டாவது வாரத்திலும் எலிமினேட் ஆகி வெளியேறியுள்ளனர்.
இந்த வார வீட்டின் தலயாக கனி இருந்து வருகின்றார். தற்போது தல பதவியில் இருக்கும் கனியிடம் இதுவரை யாரும் அவதானிக்காத முகத்தினை சக போட்டியாளர்கள் அவதானித்து வருகின்றனர்.
தற்போது வியானாவிற்கு தண்டனை ஒன்று கனி கொடுத்துள்ள நிலையில், இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி பாரு வியானாவை மூளைச்சலவை செய்துள்ளார். பாருவின் பேச்சை கேட்கும் வியானாவின் நிலை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காணப்படுகின்றனர்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |