Bigg Boss 9: Personal-ஐ எதுக்கு இங்க சொல்ற?... ஆதிரையால் வெளியான கம்ருதினின் சீக்ரெட்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆதிரை கம்ருதினைக் குறித்து அரோராவிடம் கூறிய நிலையில், இதனால் வீட்டில் மிகப்பெரிய பிரளயம் ஏற்பட்டுள்ளது.
பிக் பாஸ் 9
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 18 போட்டியாளர்கள் விளையாடி வரும் நிலையில், இன்று அப்சரா வெளியேற்றப்படுகின்றார்.
இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. அதாவது கம்ருதினின் தனிப்பட்ட விடயத்தினைக் குறித்து ஆதிரை அரோராவிடம் கூறியுள்ளார்.
இதனை அறிந்த கம்ருதின் ஆதிரையிடம் பயங்கரமாக பொங்கி எழுந்துள்ளார். நீ யாரு? என்னோட Personal-ஐ எதுக்கு இங்க சொல்ற என்று சண்டையிட்டுள்ளார்.
இத்தருணத்தில் அரோராவும் ஆதிரைக்கு ஆதரவாக கம்ருதினிடம் சண்டையிட்டுள்ளார். ஆதிரை கூறிய சீக்ரெட் என்ன? அரோரா ஏன் கம்ருதினுடன் இரண்டு நாள் பேசாமல் இருக்கின்றார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |