Bigg Boss: பிக் பாஸ் ரஞ்சித்திற்கு மனைவி பிரியா ராமன் கொடுத்த முத்தம்... பிக் பாஸ் கொண்டாட்டம் ப்ரொமோ
பிக் பாஸ் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கான ப்ரொமோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சி 8வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பித்து ஜனவரி மாதம் 19ம் தேதி முடிவடைந்தது.
இந்நிகழ்ச்சியில் 24 போட்டியாளர்களில் கலந்து கொண்ட நிலையில், வெற்றியாளராக முத்துக்குமரன் மக்களால் தெரிவு செய்யப்பட்டார்.
இரண்டாவது இடத்தை சௌந்தர்யா வென்ற நிலையில், இந்நிகழ்ச்சியின் வெற்றிக் கொண்டாட்டத்தினை பிரபல ரிவி ப்ரொமோவாக வெளியிட்டுள்ளது.
வரும் 9ம் தேதி ஞாயிற்று கிழமை மாலை 4.30 மணிக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இந்த பிக் பாஸ் கொண்டாட்டத்தில் அனைத்து போட்டியாளர்களும் கலந்து கொண்டு கலக்கியுள்ளனர்.
இதில் ரஞ்சித் தனது மனைவி பிரியா ராமனும் கலந்து கொண்டுள்ளார். நடிகர் ரஞ்சித்தும் அவரது மனைவி பிரியா ராமனும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு இருவரும் ஒன்று சேர்ந்துள்ளது ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |