Bigg Boss: பாரு, கம்ருதின் செய்த தவறு... ஒட்டுமொத்த வீட்டுக்கும் தண்டனை கொடுத்த பிக்பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்வதி மற்றும் கம்ருதின் இருவரும் மைக்கை மறைத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் பேசி வருவதால் பிக்பாஸ் ஒட்டுமொத்த வீட்டிற்கும் தண்டனை கொடுத்துள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 15 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இதில் ஆதிரையும் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே வந்துள்ளார்.
இந்த வாரம் வீட்டின் தலைவராக அமித் இருந்துவரும் நிலையில், இன்று வெளியாகியுள்ள ப்ரொமோ காட்சி வைரலாகி வருகின்றது. ஆதிரை மற்றும் எப்ஃஜே இருவரையும் சேர்த்து வைத்து வினோத் பேசியுள்ளார்.

இதனால் வினோத்திடம் வந்து ஆதிரை பயங்கரமாக சண்டை போட்டுள்ளார். மேலும் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் நீதிமன்ற டாஸ்க் நடைபெறுகின்றது.
இதில் போட்டியாளர்கள் தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று பல தவறுகளை புகாராக கொடுத்துள்ளனர். கம்ருதின் பார்வதி இருவரும் மீண்டும் தங்களது வேலையைக் காட்ட ஆரம்பித்துள்ளனர்.
அதாவது மைக்கை மறைத்துக் கொண்டு சீக்ரெட் பேசியதால் கோபமடைந்த பிக்பாஸ் வீட்டில் அனைவருக்கும் தண்டனை கொடுத்துள்ளார். ஆம் பால், காபி, டீ, முட்டை இவற்றினை வீட்டிலிருந்து எடுத்துள்ளார். இதனால் போட்டியாளர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |