ஒட்டுமொத்த போட்டியாளர்களால் ஒதுக்கப்படும் பிரதீப்... அக்ஷயாவை லவ் பண்ண சொன்னது ஏன்?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிய டாஸ்க் ஒன்றினால் பிரதீப், கூல் சுரேஷ் சண்டையிட்ட நிலையில், பிரதீப் அக்ஷயாவிடம் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் முதல் நபராக அனன்யா வெளியேற்றப்பட்டார்.
பின்பு பவா செல்லத்துரை வீட்டில் இருப்பது பிடிக்காமல் பிக்பாஸிலிருந்து வெளியேறினார். மூன்றாவதாக விஜய் வர்மாவும், நான்காவதாக யுகேந்தினும், விணுஷாவும் வெளியேறியுள்ளனர். இந்த வாரத்தின் தலைவராக மீண்டும் பூர்ணிமாகவே இருந்து வருகின்றார்.
இரண்டு வீடாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் பிரச்சினையும் இரண்டாகவே இருந்து வருகின்றது. கடந்த ஞாயிற்று கிழமை ஐந்து பேர் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்துள்ளனர்.
பிரதீப் - கூல் சுரேஷ் மோதல்... தகாத வார்த்தைகளை பயன்படுத்தி ஒருமையில் திட்டிய பிரதீப்...பரபரப்பான ப்ரோமோ
வைல்டு கார்டு எண்ட்ரியாக சென்ற போட்டியாளர்கள் அனைவரையும் பழி தீர்த்த பழைய போட்டியாளர்கள் சின்ன பிக் பாஸ் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் இன்று பிக் பாஸ் கொடுத்த புதிய டாஸ்க்கின் மூலமாக பிரதீப், கூல் சுரேஷ் மோதிக் கொள்கின்றனர். மேலும் பிக் பாஸ் வீட்டினர் பிரதீப்பை ஒதுக்கியும் வைக்கின்றனர்.
ஆனால் பிரதீப் அக்ஷயாவிடம் புதிதாக வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்த ப்ரொவோவை காதலிக்க கூறியுள்ளாராம். இது ஏன் என்பது பார்வையாளர்களிடையே குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |