பூதாகரமாக வெடித்த பிரச்சினை... அசிங்க அசிங்கமா கேட்பேன்! சீறிய நமீதா.. வினையான விளையாட்டு
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோட் நேற்று இரவு நடந்த காட்சியில் இருந்து தொடங்கியது. இதில் நேற்று இரவு தாமரை செல்வி ராம்ப் வாக் செய்தார்.
தாமரை செல்வியா இப்படி நடக்கிறார் என்று ஆச்சரியப்படும் வகையில் மாடல் அழகிகளை போல் ஒய்யார நடை போட்டார் தாமரை செல்வி. இதன் தொடர்ச்சியாக பிக்பாஸ் வீட்டில் சில போட்டியாளர்கள் தூங்கிக் கொண்டிருக்க சில போட்டியாளர்கள் மாஃபியா கேம் விளையாடினர்.
இதில் யார் மாஃபியா என பிரியங்காவுக்கும் நமீதாவுக்கும் வோட்டிங் நடந்தது. இதில் பிரியங்காதான் மாஃபியா என்று கூறப்பட்டதை தொடர்ந்து நமீதாவை கட்டியணைத்து ஆறுதல் கூறினார் தாமரை செல்வி.
பின்னர் பாத்ரூம் ஏரியாவில் அமர்ந்து பிரியங்கா, நமீதா மற்றும் தாமரை செல்வி ஆகியோர் சிரித்து பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது நாளைக்கு செம சண்டை இருக்கு.. உங்களுக்கும் எனக்கும்தான் என்று விளையாட்டாக கூறினார் நமீதா மாரிமுத்து. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அந்த சண்டை சீரியஸானது.
இடையில் புகுந்த பிரியங்கா, நீ நமீதாவை சிரித்து வெறுப்பேற்றுகிறாய் என்று திரும்பி திரும்பி கூறினார். பின்னர் படுக்கையறையிலும் சிரித்தப்படியே இருந்தார் தாமரை செல்வி. அப்போதும் பிரியங்கா எச்சரித்தார்.
ஒரு கட்டத்தில் கடுப்பான நமீதா, என்னை எப்படி ஏமாற்றுகிறேன் என்று சொல்லலாம் என கேட்டார். இதனால் வேதனைப்பட்ட தாமரை செல்வி கண்ணீர் விட்டார். இதை பார்த்து கோபமான நமீதா, சினிமாவில் கண்ணீர் விடுங்க இங்கேல்லாம் வேண்டாம் என அவர் நடிப்பதாக கூறினார்.
தாமரை செல்வி மீண்டும் பேசத் தொடங்க அந்த டாப்பிக் பத்தி பேசினா அசிங்க அசிங்கமா கேட்பேன், யார் இருக்காங்க என்று பார்க்க மாட்டேன் என்று ரூடாக பேசினார் நமீதா.
இதனை பார்த்து மொத்த ஹவுஸ்மேட்ஸும் அதிர்ச்சியாயினர். பின்னர் கார்டன் ஏரியாவில் இருந்த நமீதாவிடம் மன்னிப்பு கேட்டார் தாமரை செல்வி. ஆனால் அதையும் கண்டுகொள்ளவில்லை நமீதா.
ஆனால் சற்று நேரம் கழித்து கிச்சன் ஏரியாவில் பிரியங்கா மற்றும் நிரூப்பிடம் பேசிய நமீதா, தாமரை செல்வி தன்னிடம் நீதான் எல்லோரையும் மயக்குவியே அதுமாதிரி எனக்கு கத்துக்கொடு என்று கூறுகிறார்.
நான் சிரிப்பதா என்று கேட்க இல்லை மயக்குவது என பழையதை கிளறி கோபத்தை வெளிப்படுத்தினார் நமீதா.