உடல் எடையை குறைத்து ஒல்லியான நடிகை தமன்னா: வைரலாகும் புதிய புகைப்படங்கள்
நடிகை தமன்னா சமீப காலமாக உடல் எடையை குறைத்து செம ஸ்லிம் ஆக மாறியிருக்கும் நிலையில் ஜிம் உடையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்து.
நடிகை தமன்னா
தமிழ் சினிமாவில் ‘கேடி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான தமன்னாவுக்கு முதல் படத்திலேயே ரசிகர்களின் அமோக வரவேற்பு கிடைத்தது.
அதனை தொடர்ந்து தழிழில் அயன், பையா, வீரம், பாகுபலி, சுறா, தேவி, அரண்மனை- 4,ஜெயிலர் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார்.
தற்போது சினிமாவில் கதாநாயகியாக மட்டும் இல்லாமல், ஒரு பாடலுக்கு நடனமாடுவதிலும் கேஜிஎப், ஜெயிலர், ஸ்ட்ரீ 2 என தொடர்ந்து சூப்பர்ஹிட் கொடுத்து வருகின்றார்.
தமன்னாவின் நடிப்புக்கு மட்டுமன்றி நடனத்துக்கும் ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே செல்கின்றது.
கடந்த வருடங்களில் சற்று உடல் எடை அதிகரித்து காணப்பட்ட தமன்னா தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளார்.
ஜிம் உடையில் செம ஒல்லியாக காட்சியளிக்கு தமன்னாவின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

