இப்படியும் ஒரு ஆடையா? வைரலாகும் தமன்னாவின் புதிய புகைப்படங்கள்!
நடிகை தமன்னா வித்தியாசமான ஆடையில் ரசிகர்களின் கவனத்தை ஒட்டுமொத்தமாக ஈர்க்கும் வகையில் தற்போது வெயிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
நடிகை தமன்னா
கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிவர் தான் நடிகை தமன்னா.
முதல் படத்திலேயே தனது நடிப்பாலும், தனித்துவமான நிறத்தாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
அதனை தொடர்ந்து அவருக்கு பல மொழிகளிலும் பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. தமிழிலும் விஜய், அஜித், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பல ஹிட் படங்களை கொடுத்தார்.
சினிமா துறையில் அறிமுகமாகி குறுகிய காலத்துக்குள் முன்னணி நாயகிகளின் பட்டியலில் இடம்பிடத்த தமன்னா தற்போது தமிழ் சினிமாவை காட்டிலும் பாலிவுட்டில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.
தமிழில் அரண்மனை- 4,ஜெயிலர் போன்ற பல படங்களில் நடித்ததுடன் அதில் தமன்னாவின் நடனத்துக்கு தனி ரசிகர் கூட்டமே உருவானது.
தமன்னா ஜெயிலர் படத்தில் 'காவாலயா' பாடலுக்கு ஆடிய நடனம் ரசிகர்களை கவர்ந்து வசூலில் சாதனை படைத்தது.
இந்நிலையில் தமன்னா வித்தியாசமாக உடையில் வெளியிட்டுள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
அதை தொடர்ந்து, சமீபத்தில் வெளியான பாலிவுட் படமான 'ஸ்த்ரி 2' படத்திலும் இவர் நடனமாடிய ஆஜ் கிராத் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் வாறி குவித்தது.
நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வரும் தமன்னா, 2025ல் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் அண்மையில் தகவல்கள் கசிந்துள்ளது.
இந்நிலையில் இன்று தனது 35 ஆவது பிறந்த நாளை கொண்டாடிவரும் தமன்னாவின் சொத்து மதிப்பு பற்றிய தகவல்கள் இணையதில் வலம்வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |