தங்க நிற ட்ரெண்டிங் ஆடையில் ரசிகர்களை ஈர்க்கும் தமன்னா... வைரலாகும் புகைப்படங்கள்
நடிகை தமன்னா தங்க நிற ட்ரெண்டிங் ஆடையில் அழகு பதுமையாகவே மாறி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்பகள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
தமன்னா
தமிழ் சினிமாவில் ‘கேடி’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான தமன்னா தழிழில் அயன், பையா, வீரம், பாகுபலி, சுறா, தேவி, அரண்மனை- 4,ஜெயிலர் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடுவதிலும் கேஜிஎப், ஜெயிலர், ஸ்ட்ரீ 2 என தொடர்ந்து சூப்பர்ஹிட் கொடுத்துவரும் தமன்னாவின் ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாள் விரிவடைந்துக்கொண்டே செல்கின்றது என்றால் மிகையாகாது.
ஜெயிலர் படத்தில் காவாலா பாடலில் நடனமாடி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார். அதை தொடர்ந்து, ஸ்ட்ரீ 2' படத்தில் 'ஆஜ் கி ராத்' என்ற பாடலுக்கு நடனமாடி உள்ளார்.
தற்போது இவருடைய நடனம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வரும் நிலையில், சமூக வலைத்தளங்களிலும் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குழியில் ஆழ்த்தி வருகின்றார்.
இந்நிலையில் தங்க நிற உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் பொம்மை போல் போஸ் தற்போது தனது இன்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவதுடன், லைக்குகளையும் குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |