இந்த Drink குடிங்க.. நீங்களும் நடிகை தமன்னா போன்று தகதகனு மின்னலாம்
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை தமன்னா அவருடைய நிறத்தை பராமரிக்க என்னென்ன உணவு முறைகளை பின்பற்றுகிறார் என மருத்துவர் ஒருவர் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகை தமன்னா அவரது ஆரோக்கிய உணவு பழக்கங்கள் காரணமாக தான் அவ்வளவு அழகாக இருக்கிறார். இது குறித்து மருத்துவர் பால் மாணிக்கம் விளக்கமாக கூறுகிறார்.
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா அவருடைய உடலை கட்டுகோப்பாக பராமரித்து வருகிறார். தனது இளம் வயது முதல் திரையுலகில் நடித்து வரும் தமன்னா ஒழுக்கமான வாழ்க்கை முறையை பின்பற்றி வருகிறார் என மருத்துவர் கூறுகிறார்.
அழகை இரட்டிப்பாக்கும் பானம்
தொடர்ந்து பேசிய மருத்துவர், “தமன்னாவின் சிறுசிறு பழக்கங்கள் அவருடைய அழகை நீண்ட நாட்களுக்கு நிலைக்கச் செய்துள்ளது. வெறும் 10 நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய, ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய ஒரு உணவு தமன்னாவின் உணவு பழக்கங்களில் இன்றியமையாததாக உள்ளது.
தமன்னாவின் அழகை பாதுகாக்கும் ஸ்மூத்தியில் பசையம் இல்லாத கிரானோலா- பேரீச்சம்பழம், பாதாம் பால், நட்ஸ்கள், வாழைப்பழங்கள் உள்ளன. இதிலிருந்து கிடைக்கும் நார்ச்சத்து, இயற்கை சர்க்கரை, ஆரோக்கிய கொழுப்பு மற்றும் ஆக்ஸிடென்ட்கள் உடலின் சமநிலையை பேணும்.
இதனால் செரிமானம், ஆற்றல் மற்றும் சரும ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். காலையில் ஸ்மூத்தி குடிக்கும் பொழுது கிரானோலா மற்றும் அதிகமான நார்ச்சத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. பளபளப்பான சருமத்துக்கு தேவையான ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் வைட்டமின் ஈ சருமத்தை நெகிழ்ச்சித்தன்மை பராமரிக்கிறது.
வாழைப்பழங்கள் மற்றும் பேரீச்சம்பழங்கள் ஸ்மூத்தியில் கலந்து கொள்ளும் பொழுது உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கிறது. பெர்ரிகள், வீக்கம் மற்றும் முன்கூட்டிய தோல் முதிர்ச்சி ஆகியவற்றை தடுத்து நிறுத்துகிறது. ஒவ்வொருவருக்கும் ஸ்மூத்தி தயாரிக்கும் பொழுது தனித்தனி விருப்பங்கள் இருக்கும்.
ஆனால் ஒரு தடவை உங்களுக்கு தேவையான சமநிலையில் ஸ்மூத்தி கிடைத்து விட்டால் அதனை தவறாமல் பருகி வருவதால் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். எனவே நடிகை தமன்னா அவருடைய பளபளப்பான சருமத்திற்காக ஒரு நாளைக்கு 10 நிமிடங்கள் செலவு செய்கிறார்...” என பேசியிருக்கிறார்.
தமன்னாவை போன்று அழகாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் வெளிப்புற பாவணைக்கு அல்லாமல் உடல் ஆரோக்கியத்தை சிறந்த முறையில் பராமரிப்பது சிறந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |