தாஜ்மகாலை சுற்றி பார்க்க சென்ற அஜித்... சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?
தல அஜித் தற்போது, தாஜ்மஹால் முன்பு ரசிகர்களுடன் எடுத்து கொண்ட லேட்டஸ்ட் போட்டோஸ், சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தன்னுடைய பணிகளை சிறப்பாக செய்து முடித்து விட்டு சமீபத்தில் சென்னை திரும்பிய அஜித், சில நாட்கள் குடும்பத்துடன் ஓய்வு எடுத்த பின்னர் மீண்டும் தன்னுடைய சாகச பணிகளில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.
அந்த வகையில், டெல்லியில் நடைபெறும் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வதற்காக சமீபத்தில் தல அஜித் டெல்லி வந்துள்ளார்.
இந்த போட்டியின் பயிற்சியின் இடையில் கிடைத்த ஓய்வு நேரத்தில் அஜித், தாஜ்மகாலை சுற்றி பார்க்க சென்ற போது, அவரை அடையாளம் கண்டுகொண்ட ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர்.
மிகவும் கலகலப்பாக அஜித் ரசிகர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.