சீரியலில் களமிறங்குகின்றாரா எஸ்.ஜே.சூர்யா? பிரபல டிவி சீரியல் ஷூட்டிங் செட்டில் இருந்து லீக்கான புகைப்படம்... கடும் குழப்பத்தில் ரசிகர்கள்
ராஜா ராணியின் செட்களில், நடிகர் எஸ்.ஜே.சூர்யா இருக்கும் வைரல் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
குறிப்பாக இந்த சீரியலில் அர்ச்சனாவாக நடிக்கும் விஜே அர்ச்சனாவுடன் எஸ்.ஜே.சூர்யா இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் எஸ்.ஜே.சூர்யா சீரியலில் நடிக்கின்றாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அண்மையில் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில், நெஞ்சம் மறக்க முடியாத அசுர நடிப்பால், அனைவர் நெஞ்சத்தையும் அள்ளிய எஸ்.ஜே.சூர்யா, அடுத்ததாக பொம்மை, சிலம்பரசன் நடிக்கும் மாநாடு, மற்றும் சிவகார்த்திகேயனின் டான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தான் ராஜா ராணி சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எஸ்.ஜே.சூர்யா இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது.