இந்தியா நியூசிலாந்தின் பரபரப்பு போட்டி! வார்த்தை விட்ட ட்ரெண்ட் போல்ட்டிற்கு கோலியின் பதிலடி;
ஐசிசி டி20 உலகோப்பைக்கான இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியே அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்ற சூழல் உருவாகி இருக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில், நியூசிலாந்து வீரர் ட்ரெண்ட் போல்ட் சில வார்த்தைகளை விட்டுள்ளார். அப்போது பாகிஸ்தானின் போட்டியின் போது இந்திய வீரர்களின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை சாஹீன் அஃப்ரிடி காலி செய்தார்.
அதனைப்போலவே நானும் இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை நிலைக்குலைய வைப்பேன். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றுள்ளோம் அதையே மீண்டும் செய்வோம் என பதிலளித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த இந்திய கேப்டன் விராட்கோலி கடினமான பவுலர்களுக்கு எதிராக நாங்கள் பேட்டிங் செய்யப்போகிறோம் என்பது உண்மை தான்,. ஆனால் அன்றைய தினத்தில் நாம் அவர்களை எப்படி எடுத்துக்கொள்கிறோ, என்பதை பொறுத்து தான் இருக்கிறது.
ட்ரெண்ட் போல்ட் பாகிஸ்தான் வீரர் சாஹீன் அஃப்ரிடியை போன்று விளையாடுவேன் எனக்கூறியுள்ளார். ஆனால் நாங்கள் அந்த பவுலிங்கை எப்படி துவம்சம் செய்யலாம் என்பதை பற்றி தயாராகி வருகிறோம்.
எங்களுக்கு எந்தவித அச்சமும் இல்லை. அதுபோன்ற பவுலிங்கிற்கு நாங்கள் பல ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வருகிறோம் என கோலி பதிலடி கொடுத்துள்ளார்.
விராட் கோலி ஒரு சிறந்த கேப்டன் என்றாலும், அவரின் சிறப்பான ஆட்டக்காரர் என்பது அனைவரும் அறிந்ததே. டி20 உலககோப்பையில் ரன் மெஷினாக திகழ்கிறார்.
அதுமட்டுமின்றி கடந்த போட்டியில் கடினமான பவுலர்களின் ஓவரில் தான் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார் என்பதும் இங்கே நினைவில் குறிப்பிட வேண்டிய ஒன்று.